கோவை, பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள சரஸ்வதி தியாகராஜா காலேஜ் உள்ளது. இங்கே பொள்ளாச்சி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா சேந்த கல்லூரி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்,பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான பேக்கரிகள் உள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது,மேலும் அப்பகுதியில் உள்ள குயின் பேக்கரி மாணவர்கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது பொள்ளாச்சி அருகே உள்ள மக்கினாம் பட்டியை சேர்ந்த முத்து என்பவர் தனது அடியாட்களுடன் வந்து மாணவர்களை திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். பயந்து போன மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் ஏறி தப்பித்துச் சென்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது, மேலும் இச்சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் கல்லூரி மாணவர்களை தாக்கிய இந்து முன்னணி நிர்வாகி… பரபரப்பு
- by Authour
