Skip to content

ஒரே சூப்பர் ஸ்டார்.. ஒரே தலைவர்……. நடிகை துஷாரா விஜயன்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனேயே, பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளதால், இப்படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ’ஜெயிலர்’ வசூலை முந்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நேற்றைய முதல் நாளில், தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் பலர் திரையரங்குகளுக்கு வந்து ‘வேட்டையன்’ படத்தை பார்த்தனர். குறிப்பாக, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன், ‘வேட்டையன்’ படத்தை திரையரங்கில் பார்த்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார்.

அந்த பதிவில் “ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே தலைவர். இதுதான் என் வாழ்க்கையின் மறக்க முடியாத முக்கியமான நாள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ராயன்’ ‘வேட்டையன்’ உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுடன் நடித்து வரும் துஷாரா, தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வருவார் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!