கரூர் மாவட்டம் மண்மங்கலத்தை அடுத்த கடம்பன்குறிச்சியை சார்ந்தவர் தர்மலிங்கம். தன்னிடம் இருக்கும் இரட்டை மாட்டு வண்டியினை ஆயுதபூஜைக்காக சுத்தம் செய்வதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றிற்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். பழைய மணல் குவாரி செயல்பட்ட இடத்திற்கு சென்று காவிரி ஆற்றில் மாட்டு வண்டியை இறக்கிய போது ஒரு மாடு தண்ணீரில் மூழ்கியது. இதனை அருகில் குளித்துக் கொண்டிருந்த மண்மங்கலம் மேதி நகரை சார்ந்த சேட்டு என்கின்ற பழனியப்பன் (வயது 65) மாடுகளை காப்பாற்ற தண்ணீரில் இறங்கி உள்ளார் அப்போது, தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் புகழூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரில் தேடி பழனியப்பனின் உடலை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் காவல் நிலைய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாட்டை காப்பாற்ற முயன்ற பழனியப்பன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது