பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 156 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். எட்டு ஆசிரியர்கள் இந்த பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். ஆயுதப்பூஜையை கருத்தில் கொண்டு இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூன்று பேர், தங்களது, டூ-வீலர்களை கழுவுமாறு மாணவர்கள் சிலரிடம் கூறியுள்ளனர். மாணவர்கள் டூவீலரை கழுவும் நிகழ்வை அந்த கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் வீடியோவாக எடுத்து பரவ விட்டனர். இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் நான்கு பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் டூவீலரை கழுவ விட்ட 4 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து பெரம்பலூர் சிஇஓ உத்தரவிட்டுள்ளார்.