கோவை, பொள்ளாச்சி ஜோதி நகர் விவேகானந்தா கலை நற்பணி மன்றம் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை மற்றும் ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் கொலு வழிபாடு குறித்தும் நவராத்திரி விழாகொண்டாடுவதன் அவசியம் குறித்து இளைய தலைமுறையினர்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 10 நாட்களாக நவராத்திரி பெருவிழா நடைபெற்று வருகிறது கடந்த 3தேதி தொடங்கிய இந்த விழாவில் தினமும் ஆதீனங்கள், மடாதிபதிகளின் சொற்பொழிவு மற்றும் ஆன்மீக பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று
வருகிறது நாளை 12ஆம் தேதி இறுதி நாள் நிகழ்ச்சியில் அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது இதற்காக 30 அடி உயரத்தில் மகிஷாசூரன் வடிவத்தில் சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது தத்ரூபமாக மகிஷாசூரனுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஓவியர்கள் ஈடுபட்டுள்ளனர்.