டாடா ஸ்டீல்ஸ், டாடா பவர், டாடா மோட்ட்டர்ஸ், டாடா கெமிக்கல் என ஏகப்பட்ட நிறுவனங்கள் டாடா குழுமத்தில் இருக்க, டாடா அறக்கட்டளையின் தலைவராக ரத்தன் டாடா இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, ரத்தன் டாடாவின் தம்பி நோயல் டாடா, அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
டாடா குழுமத்தில் பல அறக்கட்டளைகள் இருக்கின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குங்கள் இந்த அறக்கட்டளையுடையது… அந்தப் பங்குகளை வைத்து தான் இந்த அறக்கட்டளைகள் செயல்படுகின்றன. இதற்கு, சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை, சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகிய இரண்டு அறக்கட்டளைகள் மட்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 52 சதவிகித பங்குகளை வைத்துள்ளது.