கோவை சாய்பாபா காலனியில் உள்ள கங்கா மருத்துவமனை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து நடத்திய தோல்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தோள்தானம் செய்வது குறித்தான விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது பின்னர் செய்தவர்களிடம் பேசிய மருத்துவர் ராஜா சண்முகம் கூறும் போது :
தற்போது தோல் தானம் குறித்தான விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேன்மொழி என்ற குறும்படம் உருவாக்கி அதனை வெளியிட்டுள்ளோம். ஒருவர் உயிரிழந்த பின் 6 மணி நேரத்திற்குள் கண் மற்றும் தோல் தானம் செய்யலாம். இவ்வாறு தோல் தானம் கொடுக்க விரும்புவோர் அழைத்தால் வீடு, மருத்துவமனை, உடற்கூறு ஆய்வு மையம் என எந்த பகுதியில் இருந்தாலும் தானமாக ஏற்றுக் கொள்வோம். அதேபோல் கால் மற்றும் முதுகு பகுதியில் மட்டுமே தோல் எடுக்கப்படும். அதனால் ரத்தம் வெளியேறுதலோ, வேறு எந்த மாற்றமும் இருக்காது. தோல் அகற்றப்பட்ட பிறகு முழுமையாக கட்டுப்போடப்பட்டு உடல் ஒப்படைக்கப்படும். இம்மாதிரி தோல் தானம் வழங்குவதன் மூலம் தீக்காயங்களால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற முடியும். பள்ளி கல்லூரிகள் மற்றும் முதியோர் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் என பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை தோல் மூலம் செய்யப்படும் சிகிச்சையை விட தானமாக பெறப்படும் தோல் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையின் கட்டணம் மிகவும் குறைவு. 17 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தோல் தானும் செய்யலாம். நாடு முழுவதும் 20 தோல் வங்கிகள் மட்டுமே உள்ளது. நமது மக்கள் தொகை மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் மக்கள் தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தான் இந்த தோல் வங்கிகள் உருவாக துவங்கியுள்ளது. தற்போதைய சூழலில் தோல் தேவையானது மிகவும் அதிகமாக உள்ளது. இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. கோவை கங்கா மருத்துவமனையில் உள்ள தோல் வங்கியில் இருந்து டெல்லியில் உள்ள நோயாளிகளுக்கும் அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்