Skip to content
Home » கோவை…. சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயர்தப்பிய குழந்தைகள் உட்பட 13 பேர்…

கோவை…. சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து… அதிர்ஷ்டவசமாக உயர்தப்பிய குழந்தைகள் உட்பட 13 பேர்…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாத்தலங்களில் மிகவும் பிரபலமானதாகும் இங்கு தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது இதில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இதை அடுத்து கேரளா மாநிலம் பாலக்காடு பகுதிக்கு உட்பட்ட ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் இவரது குடும்பத்தார் 13 பேர் சித்தூஊர் சேர்ந்த ரவீந்திரன் என்பவர்கள் டெம்போ ட்ராவலர் வேன் மூலம்வாடகை கிடைத்து நேற்று வால்பாறை பகுதிக்கு ரவீந்திரன் குடும்பத்தார் சுற்றுலாக்கு வந்துள்ளனர்,வால்பாறை பகுதியில் உள்ள

சுற்றுலா தளங்களுக்கு சென்று விட்டு இன்று மாலை வால்பாறையில் இருந்து டெம்போ ட்ராவலர் வாகனம் மூலம் வரும் பொழுது ஒன்னாவது கொண்டை ஊசி வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வனப்பகுதிக்குள் டெம்போ ட்ராவலர் புகுந்தது தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் டெப்போ வேனில் இருந்தவர்களை மீட்டனர் இதிலிருந்த குழந்தைகள் உட்பட 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர் மேலும் இந்த விபத்து குறித்து காடம்பாறை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *