மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் சிவனை பார்வதி தேவி மயில் உருவில் பூஜித்து சாப விமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் 8 ஆம் திருநாளாக ஸ்ரீ
அபயாம்பிகை அம்மன் தெட்சிணாமூர்த்தி அலங்காரத்தில் கொழுமண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சோடச தீபாராதனை, மலர்களால் புஷ்பாஞ்சலி அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை செய்யப்பட்டது. முன்னதாக ஶ்ரீஅபயாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனையுடன் நவசக்தி அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அமபலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்த கொண்டு நவராத்திரி கொலுகாட்சியை தரிசனம் செய்தனர்.