கரூர் சோமூர் பகுதியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 28 வயது பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதான அர்ஜூனன் கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் 6 ம் தேதி அன்று அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
இது குறித்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசில் மன வளர்ச்சி குன்றிய பெண்ணின் தாயார் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் அர்ஜுனனை கைது செய்தது,தொடர்ந்து வழக்கானது கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்து, குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அர்ஜுனனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மகளிர விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இன்று தீர்ப்பளித்தார்.