கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் ரோடு பகுதியில் வாழைத்தார் கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது.
நாளை கொண்டாடப்படும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரு மடங்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. பூம்பழம் ஒரு தார் 1,100 ரூபாய்க்கும், கற்பூரவள்ளி 500 ரூபாய்க்கும், ரஸ்தாளி 500 ரூபாய்க்கும், பச்ச நாடன் தார் 300 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது.
வியாபாரிகள் வாழைத்தவர்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.அதிக விலைக்கு வாழைத்தார் விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சில்லறை விலைக்கு ஒரு வாழை சீப்பு 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.