முரசொலி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், கலைஞா் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம் இன்று காலமானார். இதையொட்டி அனைத்துக்கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.