முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அக்கா மகன் முரசொலி செல்வம்(82). இவர் இன்று காலை பெங்களூரு இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.
முரசொலி செல்வம், முரசொலி மாறனின் உடன் பிறந்த தம்பி. கருணாநிதியின் மகள்( முதல்வர் ஸ்டாலின் சகோதரி) செல்வியை திருமணம் செய்துள்ளார். செல்வம் சிறிது காலம் முரசொலி ஆசிரியராகவும் இருந்தார். முரசொலியில் அவ்வப்போது கட்டுரை எழுதி வந்தார். அதிமுக அரசுக்கு எதிராக முரசொலியில் செய்தி வெளியிட்டதற்காக ஜெயலலிதா ஆட்சியில் முரசொலி ஆசிரியர் செல்வத்தை, சட்டமன்றத்தில் கூண்டு அமைத்து அதில் நிற்க வைத்து தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்வம் மறைவுச்செய்தி கேட்ட முதல்வர் ஸ்டாலின் கண்கலங்கினார். நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் கூறி உள்ளார். இன்று மாலை செல்வத்தின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்குகள் நடக்கிறது.
்