கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் ராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தும் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுவதாகவும் இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ஆன்லைன் விற்பனையால் அரசிற்கு எந்த லாபமும் இல்லை என கூறிய அவர்கள் ஆன்லைன் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும் என்றனர்.
ஆன்லைன் மூலம் பட்டாசுகளை ஆர்டர் செய்யும் பொழுது பாதுகாப்பில்லாமல் வழக்கமான ட்ரான்ஸ்போர்ட் வாகனங்களிலோ கார்களிலோ எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டனர். மேலும் தள்ளுபடி என்ற பெயரில் தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்வதாக குற்றம் சாட்டினர்.ஆன்லைனில் போலி விளம்பரங்களை கொடுத்து தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்வதாகவும், சிவகாசியை மையமாகக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்வதாக தெரிவித்த அவர்கள் இது போன்று விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் தருவதில்லை எனவும் இதனால் பட்டாசுகளை வாங்கி கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கவுன் முடியாது என கூறினர்.
தீயணைப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து பட்டாசு கடைகளிலும் நோட்டீஸ் வழங்க இருப்பதாகவும் கடைகளில் பிளக்ஸ் ஒட்டி இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம் என தெரிவித்தனர்.