புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திட்டங்கள் முன்னேற்றம் குறித்த செயலாக்க ஆய்வுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் இன்று (27.01.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.