Skip to content
Home » ஆந்திராவில் சுவரொட்டி…. அழுக்கேறிய மூளை……பரிதாபப்படுகிறேன்….. உதயநிதி அறிக்கை

ஆந்திராவில் சுவரொட்டி…. அழுக்கேறிய மூளை……பரிதாபப்படுகிறேன்….. உதயநிதி அறிக்கை

  • by Senthil

ஆந்திர மாநில துணை முதல்வராக இருப்பவர்  நடிகர் பவன் கல்யாண். இவர்  தமிழ் நடிகர் கார்த்தியை மன்னிப்பு கேட்க வைத்தார். தற்போது அவர் தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக ஆந்திராவில்  மறைமுகமாக போராட்டத்தை கிளப்பி விட்டு உள்ளார். உதயநிதிக்கு எதிராக அங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து துணை முதல்வர் உதயநிதி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!

கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் – பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் – மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.

கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு – சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!