தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் 2,000 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டுநர் (Paker) பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வின்றி, நேரடி நியமனம் நடைபெறுகிறது.
drbchn.in என்ற இணையதளம் மூலம் நவம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு பணி நியமன நாளில் இருந்து தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். விற்பனையாளருக்கு பணி நியமன நாளில் இருந்து ரூ.6250ம், ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8600-29000 வழங்கப்படும்.
கட்டுனர் பணிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5500ம், ஓராண்டுக்கு பிறகு ரூ.7800-26000 வரை வழங்கப்படும்.