வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்வாரியம் எப்படி செயல்பட வேண்டும். அடைமழை பெய்தாலும் தடையின்றி மக்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். மின்தடைகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை சீரமைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்காக மழைக் காலங்களில் மின்வாரிய அலுவலர்கள் எக்காரணம் கொண்டும் அலைபேசியை ஆஃப் செய்து வைக்கக் கூடாது என்று மின்வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.