திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்கல் கண்டார்கோட்டை கந்தசாமி நகரை சேர்ந்தவர் யாகூப். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி பரிதா (60)இவர்களது மகன் சதாம் உசேன் டிப்ளமோ படித்துவிட்டு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறான். இவரது மனைவி ஜெயராணி இவர்கள் நான்கு பேரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம்ஒரு சுப நிகழ்ச்சிக்கு பரிதா தனது24 பவுன் நகையை போட்டுக்கொண்டு சென்றார். திரும்பி வந்ததும் நகைகளை திரும்ப பீரோவில் வைத்தார்.
இந்த நிலையில்கடந்த 5ம் தேதி பீரோவை திறந்து பார்த்த பொழுது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை. இதனால் பரிதா அதிர்ச்சி அடைந்தார்.
இது சம்பந்தமாக வீட்டில் உள்ளவர்களிடம் கேட்ட பொழுது யாரும் தங்களுக்கு தெரியாது என கூறி உள்ளனர்.இந்த நிலையில் பரிதா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இவரது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் வெளி ஆட்கல் யாரும் வந்து செல்லாத நிலையில் இவர்கள் நான்குபேருக்குள் யாராவது ஒருவர் தான் எடுத்து வைத்திருக்க வேண்டும் என சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நான்கு பேரையும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் முகமது உசேன் தான்தனது வீட்டில் இருந்து நகைகளை எடுத்தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
அதன் அடிப்படையில் முகமது உசேனை கைது செய்து 14 பவுன் நகையை மீட்டதோடு முகமது உசேனை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சொந்த மகனே தனது வீட்டில் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.