முன்பெல்லாம் விவசாயிகள் சாகுபடி செய்ய நெல் நாற்றங்கால் விதை விதைத்து அதை 30 நாட்களுக்கு மேல் தான் தாங்கள் வயல்களில் நடவு செய்ய ஆரம்பித்தார்கள் ஆனால் அதில் அதிகமாக செலவாகிறது மற்றும் ஆள் பற்றாக்குறை , தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதால் விவசாயிகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி வருகின்றனர்
தற்போது ‘பவர் ஸ்பிரேயரில்’ நேரடி நெல் விதைப்பு பயன்படுத்தி வருகின்றனர்
திருச்சி திருவெறும்பூர் அருகில் உள்ள கூத்தை ப்பாரில் உள்ள சுப்பிரமணியன் என்கின்ற விவசாயி பவர் ஸ்பிரேயரை பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மேட்டூர் அணையிலிருந்து முறையாக தண்ணீர் திறக்கப்படும்பட்சத்தில், சம்பா சம்பா சாகுபடியை மட்டும் நம்பி உள்ள டெல்டா விவசாயிகள் சுமார் 10லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்
இதில், பெரும்பாலும் நாற்றங்கால் தயார் செய்து, நாற்று விட்டு, அதை பறித்து வயல் களில் நடுவது தான் வழக்கமாக செய்யப்படும் சாகுபடி முறை, கடந்த சில ஆண்டுகளாக கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திர நடவு முறையை விவசாயிகள் பலரும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டதாலும், மழை பொய்த்து போனதால் திருவெறும்பூர் சுற்றியுள்ள ஏரி குளங்கள் போதிய நீர் கிடைக்காததால் நீர் வசதியில்லாத, அதிகம் தண்ணீர் சென்று பாயாத கடைமடைப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பெரும்பாலும் நேரடி நெல் விதைப்பு செய்யப்படும். இந்த முறையில் அதிக மகசூல் கிடைக்காது என்றாலும், நாற்றங்கால் தயாரிப்பு, நாற்று பறித்தல், நடவு செய்ய காலம் தவறியதால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நேரடி நெல் விதைப்பு முறையில், விதைகளை வயல்களில் ஆட்கள் வைத்து தூவுவதற்கு பதிலாக, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் விசை தெளிப்பான் இயந்திரம் (பவர் ஸ்பிரேயர்) மூலம் விதைநெல்லை வயலில் நேரடி விதைப்பாக தெளிக்கும் முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த இயந்திர தெளிப்பான் மூலம் விதைகளை தெளிக்கும் போது விதை தெளிப்பு சீராக இருக்கும். இயந்திரத்திலிருந்து உந்துதலு டன் வேகமாக சென்று விதைகள் மண்ணில் புதைந்து, நன்கு முளைக்கும். மேலும், நடவுப் பயிர் போன்று பயிர்கள் நன்கு தூர்பிடித்து வளரும்.
விதை ரகம், மண்ணின் தன்மை ஆகியவற் றுக்கு ஏற்ப ஏக்கருக்கு 5 கிலோ முதல் 15 கிலோ விதைகள் போதுமானது. நடவு செய்த வயலில் கிடைப்பது போன்றே மகசூலும் அதிகளவில் கிடைக்கும். இதற்காக ரூ.500 கூலி மட்டுமே செலவாகிறது
மேலும் நாற்றங்காலில் இருந்து நாற்றை பறித்து நடுவதற்கு 4500 முதல் 5000 ரூபாய் வரை செலவாகிறது. அந்த செலவும் இதற்கு இல்லை.
மேலும் விதையும் அதில் பாதி தான் செலவாகிறது. நேரமும் மிச்சமாகிறது ஆகையால் விவசாயிகள் இனி பவர் ஸ்பிரே நேரடி நெல் விதைப்புக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மாற்றம் ஒன்று தானே மாறாதது.