வரும் 9ஆம் தேதி அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்று தமிழகத்தினூடே செல்ல வாய்ப்புள்ளதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்தும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கேரளாவில் இன்று முதல் 5நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்றும், நாளையும், மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த 3 நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.