தமிழகத்தில், இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலுார், சிவகங்கை மாவட்டங்களில், அதிகபட்சமாக, 13 செ.மீ., வரை மழை பதிவாகி உள்ளது. வங்கக்கடலில் ஆந்திர கரைக்கு அப்பால் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி சில நாட்களுக்கு முன் உருவானது. தற்போது, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களை ஒட்டிய, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 12 வரை, இதே நிலை தொடரும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.