சென்னையில் நேற்று நடைபெற்ற விமானப்படையின் ஏர்ஷோவை சுமார் 15 லட்சம் பேர் நேரில் பார்வையிட்டதாக கணக்கிடப்பட்டது. மெரினா மட்டுமல்லாது கோவளம், எண்ணூர் வரை லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்து விமான சாகசத்தை பார்த்தனர். எதிர்பாராத அளவிற்கான கூட்ட நெரிசல் காரணமாக ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நபர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. அதேபோல் அளவிற்கு அதிகமாக வேர்வை காரணமாக பலருக்கு நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இப்படியாக சுமார் 230க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த சுகாதார குழுவினர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டனர். மேல் சிகிச்சை அவசியம் பெற்ற 93 பேர் 40 ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (48), திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34), கொருக்குப்பேட்டை ஜான் (56), தினேஷ் (37) உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.