Skip to content

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒருவர் உயிரிழப்பு..

  • by Authour
வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகசங்கள் இடம்பெற்றன. சுகோய் சு 30, ஹெலிகாப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்ட 72 விமானங்களை விதவிதமாக இயக்கி சாகசத்தை விமானப்படை வீரர்கள் அரங்கேற்றினர்.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த சாகச நிகழ்ச்சியை காண மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சென்னை மெரினாவில் திரண்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடை பிடித்தபடி விமானங்களின் சாகசங்களை கண்டு ரசித்தனர். இந்நிலையில் இதனிடையே சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தார். வெயில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்டோருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 4 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!