நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டியில் நடைபெற்றது.தற்போது, அடுத்தகட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யாவின் 44வது படம் நிறைவடையும். வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படப்பிடிப்பு இருக்கிறது. அதற்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ இந்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சூா்யா. ஹிந்திப் படம் என்பது இன்னும் முடிவாகவில்லை.
சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜோதிகாவும் இந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஐஐஎஃப்ஏ விழாவில் இந்தி இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாசிடம் சூர்யா படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ், “100 சதவிகிதம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கர்ணா என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாக தகவல்.
இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் பாக் மில்கா பாக், தூஃபான் போன்ற விளையாட்டு ரீதியான படங்கள் எடுத்து பிரபலமானவர்.