பாஸ்போர்ட் இணையதளம் வரும் அக்.7-ம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக, பாஸ்போர்ட் இணையதளம் அக். 7-ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. இந்த காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரா்கள்,
இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, விண்ணப்பதாரா்கள் நேர ஒதுக்கீடு மற்றும் சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பின்னா் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.