திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க மிருகங்களில் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆந்திர மாநில அரசு நியமித்துள்ள சிறப்பு விசாரணை குழுவை கலைத்து 2 சிபிஐ அதிகாரிகள், ஆந்திர மாநில போலீஸ் துறை பரிந்துரைக்கும் போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மற்றும் இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை மூத்த அதிகாரி ஒருவர் என ஐந்து பேர் கொண்ட குழுவாக சிறப்பு விசாரணைக் குழுவை மத்திய மாநில அரசு இணைந்து அமைக்கவும் இதில் அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை தொடர்பானது என்பதால் இதில் அரசியலுக்கு இடம் அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் தளத்தில் திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ, ஆந்திர காவல்துறை மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரிகள் அடங்கிய எஸ்ஐடியை அமைத்து மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன் என பதிவு செய்துள்ளார்.