சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 22661 விரைவு வண்டிதிருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் நார்த்தமலை LC.GATE 360 KM 440/4 வந்து கொண்டிருந்த பொழுது வண்டி எஞ்சின் புகைப் போக்கியில் டர்பர் ட்யூப் வெடித்ததால் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக வண்டியானது அதே இடத்தில் நள்ளிரவில் 12.20 மணி அளவில் ரயில் நிறுத்தப்பட்டு ரயில் இன்ஜின் ஓட்டுநர்களால் தீயணைக்கப்பட்டது. பின்னர் கூடுதல் ரயில் எஞ்சின்
வரவழைக்கப்பட்டு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 2 மணியளவில் ரயில் ராமேஸ்வரம் நோக்கி நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் 2 மணி நேரம் நீண்ட சிரமத்திற்கு ஆளானார்கள்.