Skip to content

ஓய்வு பெற்ற 150 போலீஸ் அதிகாரிகள்….திருச்சியில் ரீயூனியன்..

  • by Authour

1987 ம் ஆண்டில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் 35 வருடங்களுக்கு பிறகு திருச்சியில் குடும்பத்தாருடன் ஒன்று கூடி மறு சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி சோலை தங்கும் விடுதியில் கடந்த 28 மற்றும் 29 செப்டம்பர் தேதிகளில் மிக சிறப்பாக நடத்தினர்.

இதில் 150 ஓய்வு பெற்ற டிஎஸ்பி ,ஏடிஎஸ்பி மற்றும் எஸ் பி ஆகியோர் குடும்பத்தாருடன் 300 நபர்கள் கலந்து கொண்டனர். திருச்சி சார்பில் ஓய்வு பெற்ற கூடுதல் எஸ் பி கண்ணன், சாமிநாதன், மந்திரமூர்த்தி மற்றும் நண்பர்களுடன் விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்திருந்தனர்.

வந்தவர்களுக்கு அறுசுவை உணவு கண்களுக்கு விருந்தாக முதல் நாள் இரவு டான்ஸ் மற்றும் பெண்களுக்கான அழகி போட்டி ஆண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது மறுநாள் ஒவ்வொரு ஊரில் இருந்தும் சென்னை, கோவை ,மதுரை, சேலம் ,வேலூர், திருச்சி ஆகிய பங்களிப்பாளர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். பின்னர் ஸ்ரீரங்கம் கலைமாமணி ரேவதி குழுவினரின் பரதநாட்டியம் மற்றும் சிறப்பான பட்டிமன்றம் சன் டிவி புகழ் திரு அருள் பிரகாஷ் நடுவராக கொண்டு  நடைபெற்றது அனைவரும் தங்களின் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து  ‘பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்;என்று  2 நாள் கூடுகையை மகிழ்வுடன்  நிறைவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!