தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு:
தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் மின் உற்பத்தி கழக நிர்வாக இயக்குனர் மற்றும் சேர்மனராக இருந்த லக்கானி மாற்றப்பட்டார். அவருக்குப்பதில் ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் மின்வாரிய புதிய சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பாக, கால்நடைத்துறை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
* உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கூடுதல் தலைமை செயலாளர் கோபால், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமனம்.
* தமிழக மின்சாரத்துறை தலைவராக இருந்த ராஜேஷ் லகானி, வருவாய் நிர்வாக ஆணையராக நியமனம்.
* வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் சுந்தரவல்லி கல்லூரி கல்வித்துறை ஆணையராக நியமனம்.
* பொதுத்துறை இணை செயலாளர் விஷ்ணு சந்திரன், வேலைவாய்ப்பு துறை இயக்குனராக நியமனம்.
* சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கைத்தறி, ஜவுளித்துறை செயலாளராக நியமனம்.
போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் லில்லி, சமூக நலத்துறை ஆணையராக நியமனம்.
* சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் லலிதா, ஜவுளித்துறை இயக்குனராக நியமனம்.
* திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் பொதுத்துறை துணை செயலாளர் ஆக நியமனம்
* கைத்தறி துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழக சிறு தொழில் வளர்ச்சி கழக தலைவராக நியமனம்
* தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழக தலைவர் ஸ்வர்ணா, ரூசா திட்ட மாநில இயக்குனராக நியமனம்
* நிதித்துறை இணை செயலாளர் பிரதீவ் ராஜ், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக நியமனம்
* கலால் துறை ஆணையராக முன்பு பதவி வகித்த, ஜெயகாந்தன் தமிழக நீர்நிலை மேம்பாட்டு திட்ட நிர்வாக இயக்குனராக நியமனம்.