திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மத்திய பிரதேச மாணவி மாயமானவழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் பெண்ணின் பெற்றோர் மத்திய பிரதேச முதல்வரை சந்தித்து மனு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி என் ஐ டி கல்லூரி மத்திய அரசின் மனித வள துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஓஜஸ்வி குப்தா
என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்ற ஓஜஸ்வி மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை .அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்ஐடி கல்லூரி பாதுகாவலர்கள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அலுவலகத்தில் காணாமல் போன மாணவியின் பெற்றோர் மற்றும் என்ஐடி பாதுகாப்பு அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் போது மாணவி ஒஜஸ்வி குப்தா, சில |நாட்களாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும் தேர்வு பயம் இருந்து வந்ததாகவும் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார் மேலும் சைக்கிள் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய தேர்விற்கு அவர் சரிவர படிக்கவில்லை என தனது அண்ணனிடம் ஃபோனில் பேசி உள்ளார். அதேபோல் தன்னுடன் படிக்கக்கூடிய சக மாணவர்களிடமும் தேர்வு குறித்து பயத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி ஒஜஸ்வி குப்தா,ஒரு கடிதம் எழுதிவைத்துள்ளார் அந்த கடிதம் பாதி ஆங்கிலத்தில் பாதி ஹிந்தி மொழியிலும் உள்ளது. அதில் தான் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் படித்து வருவதாகவும்அந்த கல்வி நிறுவனத்தில் வகுப்பிற்கு தன்னை லீடராக நியமித்துள்ளனர் அதை நிர்வகிப்பதில் சிரமம் இருப்பதாகவும் சீனியர் எல்லாம் இருக்கும் பொழுது ஜூனியர் ஆன தனக்கு அந்த பொறுப்பை வழங்கியதை சீனியர்கள் ஏற்றுக் கொண்டது போல் தெரியவில்லை. இங்கு நாம் ஆளுமையுடன் இருக்க வேண்டுமென்றால் அதற்கு உரிய வசதி மற்றும் பின்புலம் இருக்க வேண்டும் என கருதுவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒஜஸ்வி குப்தா கல்லூரியை விட்டு வெளியே சென்ற போது கையில் ஒரு சிறிய பையுடன் மட்டுமே சென்றுள்ளார். மேலும் சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பேருந்தில் ஏறி சென்றுள்ளார். அவரது செல்ஃபோன் கல்லூரி விட்டு வெளியே வந்தவுடன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இதுவரை ஆன் செய்யப்படவில்லை. மேலும் அவரது வங்கி கணக்கில் காணாமல் போன அன்று இருந்த தொகை எவ்வளவு இருந்ததோ அந்த தொகை இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவர் வெளிநாடு செல்ல வாய்ப்பு இல்லை.
அவரது கால் ஹிஸ்டரியை பொறுத்தவரை அவர் பெற்றோரிடமே அதிக நேரம் பேசி உள்ளார்.
மேலும் காதல் விவகாரத்தினால் வெளியே சென்றுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த போது அவருக்கு காதலன் இருந்ததாக இதுவரை தெரியவில்லை.
அவர் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் தேர்வு பயத்தினால் மட்டுமே அவர் வெளியே சென்று இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீசார் மாணவியின் புகைப்படம் மற்றும் அடையாளத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து உள்ளதாகவும் அதே போல் பேருந்து டிப்போவிற்கு அனுப்பி வைத்து டிரைவர் கண்டக்டர் மூலம் அடையாளம் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுவந்த நிலையில் மாயமான மாணவி ஒஜஸ்வி குப்தாபற்றி எந்த வித தகவலும் துவாக்குடி போலீசாருக்கு இதுவரை கிடைக்கவில்லை.
இதனால் போலீசார் என்ன செய்வதென்று புலம்பி வரும் வேளையில் அவரது பெற்றோர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள எம் பி ,மேயர், மூலமாக மத்திய பிரதேச முதல்வரை நேரில் சந்தித்து தங்களது மகள் ஒஜஸ்வி குப்தா, தமிழகத்தில் உள்ள திருச்சி என் ஐ டி கல்லூரியில் எம் சி ஏ படிப்பதற்காக சென்றவர் மாயமாகி 15 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் ஒஜஸ்வி குப்தா பற்றி எந்தவித தகவலும் தெரியாத நிலையில் ஒஜஸ்வி குப்தாவை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிமத்திய பிரதேச முதல்வரிடம் ஒஜஸ்வி குப்தா,பெற்றோர் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால் துவாக்குடி போலீசாருக்கு அழுத்தம் அதிகமாகி உள்ளது.
தனது அறையில் உள்ள சக மாணவிகள் கொடுத்த டார்ச்சர் காரணமாக அவர் ஓடிவிட்டதாக அவரது பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டதையொட்டி அந்த 6 மாணவிகளிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் நாங்கள் யாரும் அவளை டார்ச்சர் செய்யவில்லை என்று கூறி விட்டாா்களாம். இதனால் போலீசார் மாணவியை தேடும் பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.