தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்ற இடத்தில் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நாளை மறுதினம்(4ம் தேதி) நடக்கிறது. அன்று காலை மாநாட்டு திடலில் பூமி பூஜை செய்யப்பட்டு பந்தல் அமைக்கும் பணி தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் செய்துள்ளார்.