Skip to content
Home » மலைவாழ் மக்கள் அச்சம்… புதிய வீடு கட்டித்தர கோரிக்கை…

மலைவாழ் மக்கள் அச்சம்… புதிய வீடு கட்டித்தர கோரிக்கை…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட ஆழியார் அணை கரையோரம் உள்ள சின்னார்பதி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும், 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்,வேட்டை தடுப்பு காவலர்களகவும் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்,கடந்த 1992 ஆம் ஆண்டு இவர்களுக்கு தமிழக அரசால் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன, 30 வருடங்கள் கடந்த நிலையில் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து மழைக் காலங்களில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்,2012 ஆம் ஆண்டு வனத்துறையினர் தகர சீட்டுகள் மூலம் வீடுகள் குறைந்த அளவில் கட்டித்தரப்பட்டது,காலப்போக்கில் தொடர் மழையின் காரணமாக மற்ற வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது,கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக சின்னார் பதியில் மழையால் ஆறு வீடுகள் தரை மட்டமானது, இதையடுத்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்து மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய உதவித் தொகை வழங்கினார்,தற்போது தமிழகத்தில் மாண்டாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று இரவு சின்னார் பதியில் வசிக்கும் மாயவன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது,இதனால் குழந்தைகள் உட்பட மாயவன் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது,தமிழக அரசு புதிய குடியிருப்புகள் கட்டி தர வேண்டும் என மலைவாழ் மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்,மேலும் மலைத் தொடர்ரும் ஆனால்மீண்டும் வீடுகள் இடியும் அபாயம் உள்ளது என தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *