லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரத்தக் குழாயில் வீக்கம் இருந்ததால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவருக்கு ரத்தக் குழாயில் ‘ஸ்டென்ட்’ பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய் சதீஷ், மகாதமனி வீக்கத்தை சரிசெய்யும் வகையில் அந்த இடத்தில் ‘ஸ்டென்ட்’ கருவியை பொருத்தினார். இது ஒரு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை ஆகும். திட்டமிட்டபடி, சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராகவும், நலமாகவும் உள்ளது. 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்றுஇரவு போன் மூலம் ரஜினி மனைவியிடம் பேசி , ரஜினியின் உடல் நலம் விசாரிததார்.
துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினரும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.