குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். உடலுறவின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அந்தபெண் பெண் இறந்திருப்பதாக தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் நவ்சாரி என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் காதல்ஜோடி அறை எடுத்து தங்கி உள்ளனர். அங்கு காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது, பெண்ணுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறியிருக்கிறது. ஆனால், அவரது காதலனோ, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முயற்சி செய்யாமல், ஆன்லைனில் வழிமுறைகளை தேடி நேரம் கடத்தியிருக்கிறார்.
இதற்கிடையே ரத்தப்போக்கு மேலும் அதிகமாகி அந்த பெண் மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர் நண்பர் ஒருவர் உதவியுடன் அவர் காதலியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார். அவரை பரிசோதித்த டாக்டர் காதலி ஏற்கனவே இறந்து விட்டார் என கூறி உள்ளார். இதையடுத்து போலீசார் காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.