Skip to content
Home » இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால்…….ஈரானுக்கு….அமெரிக்கா கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால்…….ஈரானுக்கு….அமெரிக்கா கடும் எச்சரிக்கை

  • by Senthil

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரிக்கும் வகையில், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலையொட்டிய லெபனான் எல்லைப் பகுதிகளில், சண்டை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் உடன், அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலர் லாய்டு ஜெ. ஆஸ்டின் இன்று தொலைபேசி வழியாக  முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது: “இஸ்ரேலை பாதுகாப்பதற்கான உரிமை அந்நாட்டுக்கு இருக்கிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது.

ஏற்கெனவே இஸ்ரேலில் கடந்தாண்டு அக்டோபர் 7-ல் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று, இஸ்ரேலின் வடக்கு எல்லைகளில் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தாக்குதல்கள் நிகழ்த்தாமலிருப்பதை உறுதிசெய்ய, இஸ்ரேல் எல்லைகளில்(லெபனானை ஒட்டியுள்ள பகுதிகளில்) பயங்கரவாதக் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இஸ்ரேல் – லெபனான் எல்லைகளின் இருபுறத்திலும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்புவதை உறுதிசெய்ய தூதரக ரீதியிலான தீர்வு எட்டப்பட வேண்டும்.

(மத்திய கிழக்குப் பகுதிகளில்)அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கு, ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் அமெரிக்க வலுவாக உள்ளது. அதேபோல, போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுத்திடுவதிலும் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ராணுவ தாக்குதல்களை நிகழ்த்தினால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!