நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மாணவிகள் கோ-கோ போட்டி முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 2நாட்கள் நடந்தது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குனர் முனைவர் S. ஆறுமுகம், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்ட் D. கார்த்திகேயன் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.கிருஷ்ணவேணி ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். கல்லூரி அறங்காவலர் கமலா சௌந்தர பாண்டியன்,கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாலகன் கிருஷ்ணன் மற்றும் கீதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 35 கல்லூரிகளில் இருந்து 525க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம், புனித அல்போன்சா கல்லூரி அணி முதலிடமும் ,தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லூரி இரண்டாவது இடமும் ,கன்னியாகுமரி மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மூன்றாவது இடமும் ,குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி நாலாவது இடமும் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பாலகன் சரஸ்வதி அம்மாள் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் அறங்காவலர் கமலா சௌந்தர பாண்டியன் வெற்றி கோப்பைகளை வழங்கினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்.ஜே. ஜெய்சன், டாக்டர்.யு. நாராயணி , டாக்டர்.ஜே. ராஜா சிங் ரோக்லாண்ட் ,தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே ஜெயபாலன், முக்கூடல் பேரூராட்சித் தலைவர் ராதா லட்சுமணன், துணைத் தலைவர் ஆர்.லட்சுமணன் ,முக்கூடல் வார்டு திமுக கவுன்சிலர்கள் மற்றும் பக்த பிரமுகர் பொன்னரசு , கல்லூரி உறுப்பினர்கள் PRA பொன்னுசாமி, EPP கணேசன் மற்றும் S.ஜோதி ,கல்லூரி மாணவர்கள் ,பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.