தஞ்சை மாவட்டம் தங்கப்ப உடையான்பட்டி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து வல்லம் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது நிவாஸ், ஸ்ரீதரன் மற்றும் போலீசார் மணிகண்டன், பீலிதரன், சபரி ஆகியோர் தங்கப்ப உடையான்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள காட்டுவாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்தியத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வல்லம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மணல் அள்ள பயன்படுத்தபட்ட வாகனங்களின் உரிமையாளர் தங்கப்ப உடையான் பட்டி எழில் ( 30 ), லாரி டிரைவர் அஜித்குமார்(30) ஆகிய இருவரையும் கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்