சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சேலம் ஆர்.ராஜேந்திரன் மற்றும் செந்தில் பாலாஜி, கோவி செழியன் ஆகியோர்
அமைச்சராக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்து கொண்டார்.