இந்தியா – வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்து முதலில் பந்து வீசியது. 35 ஓவர் வீசிய நிலையில் பலத்த மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. அப்போது வங்கதேசம் 3 விக்கெட் இழந்து 35 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் இன்றும் ரத்து செய்யப்பட்டது. இன்று ஒரு பந்துகூட வீசப்படவில்லை. நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெறும்.