குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுவரும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில் திமுக தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளது. குடியரசு தின தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதேபோல் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு,பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.