கேரள மாநிலம் திருச்சூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு கன்டெய்னர் லாரியில் தப்பினர். இந்த கன்டெய்னரை இன்று காலை 9.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி போலீஸ் பிடித்தது.
போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த கொள்ளையனின் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொள்ளையன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீஸ் துப்பாக்கி முனையில் கைது செய்தது.
