Skip to content
Home » சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இன்பரசன் (27), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு தந்தை செல்வராஜ் பணம் உள்ளிட்ட உதவிகளை செய்து அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மகன் இன்பரசன் வெளிநாடு சென்று வந்து அப்பாவிற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் சொத்தை உடனடியாக பிரித்து தர வேண்டும் என்று மகன் இன்பரசன் தந்தை செல்வாஜிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் தனது நண்பர் உலகநாதன் உதவியுடன் இன்பரசனை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இன்பரசன் இரத்த வெள்ளத்தில் சம்ப இடத்தில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல்த்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்திற்காக தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!