பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டில்லியில் அளித்த பேட்டி:
பிரதமருடன் இனிய சந்திப்பு நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில்தான் உள்ளது. மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டிய 3 கோரிக்கைகளை அவரிடம் கொடுத்துள்ளோம்.
சென்னை மெட்ரோ ரயிலின் முதல்கட்ட பணிகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தியது போன்று, இரண்டாம் கட்ட பணிகளையும் இணைந்து செயல்படுத்துவதுதான் எங்களின் நோக்கம்.
இரண்டாம் கட்டப் பணிகளை தாமதம் செய்யாமல் மேற்கொள்ள 2019ம் ஆண்டு கடன் பெற்றும், மாநில அரசு நிதியில் இருந்தும் பணிகள் தொடங்கப்பட்டன. பின்பு மத்திய அரசுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
ஆனால், இதுவரை மத்திய அரசின் நிதி தமிழகத்துக்கு வழங்கப்படாததால், மெட்ரோ பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகையால், தாமதமின்றி நிதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது, மத்திய அரசின் 60 சதவிகித நிதியும், மாநில அரசின் 40 சதவிகித நிதியுடன் செயல்படுத்தும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு இந்த ஆண்டு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி ரூ. 2,152 கோடி.
இந்த தொகையில் முதல் தவணை இதுவரை தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததை காரணமாக கூறுகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையைவிட காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மொழி திணிக்கப்படாது என்று கூறினாலும், கொள்கையில் திருத்தம் தேவை.
ஆசிரியர்கள் ஊதியம் கொடுக்க முடியாத சூழலும், மாணவர்கள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளதை எடுத்துக் கூறியுள்ளோம்.
மூன்றாவது, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து துன்புறுத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் இந்த சம்பவம் நடைபெறுகிறது. எனவே, உடனடியாக இலங்கை அரசிடம் பேசி தீர்வு காண மத்திய அரசிடம் கோரியுள்ளேன்” .
இந்த மனுக்கள் குறித்து விரைவில் முடிவு அறிவிக்கிறேன் என்றார். நல்ல முடிவை அறிவிப்பார் என்று நம்புகிறேன்.
பின்னர் திருமாவளவன் அமைச்சர் பதவி கோரி வருவது குறித்து கேட்டபோது, அவரது அவரது கொள்கை, அதை இப்போது புதிதாக சொல்லவில்லை. தொடர்ந்து சொலிக்கொண்டிருக்கிறார் என்ற முதல்வர்
பிரதமருடன் சந்திப்பு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு அவர் பிரதமராக சந்தித்தாா. நான் முதல்வராக சந்தித்தேன் என்றார்.