தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களை தரக்குறைவாக பேசி, தாக்க முயற்சித்த சம்பவத்தை கண்டித்தும், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாட்டின் மூத்த தமிழ் அறிஞர்கள், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழு உறுப்பினர்கள், முனைவர் வீ.அரசு .முனைவர் சி.அமுதா இருவரும் சிண்டிகேட் கூட்டத்தில் பங்கேற்று தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பணிநியமன முறைகேடுகள் குறித்து பேசியது தொடர்பாக, கூட்டம் முடிந்து இருவரும் வெளியேறும் போது, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இரு பேராசிரியர்கள் அரசையும், அமுதாவையும் தரக்குறைவாக பேசி, தாக்க முயற்சித்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் அனைத்துக்கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
முனைவர்கள் இருவரும் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநருக்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனுப்பிய புகார் கடிதம் குறித்து த்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் புகார் கடிதம் அளித்தும் அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக தரக்குறைவாக பேசி தாக்க முயற்சித்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாவரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் நெடுஞ்செழியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ் . எம் . ஜெய்னுல்ஆப்தீன ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேச மக்கள் முன்னணி செயலாளர் ஆலம்கான், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன்,மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச்செயலாளர் ராவணன், தஞ்சை நஞ்சை கலைக்குழு சாம்பான், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் அ.ரெ.முகிலன்,ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் முருகேசன் கார்த்திகேயன் பல்வேறு இயக்க நிர்வாகிகள் தேவா, கே.ராஜன், பொறியாளர் கென்னடி, அபுசாலி, சுப்பராயன், இம்தியாஸ் அகமது, விசிறி சாமியார் முருகன், சாமிநாதன், லெட்சுமணன், தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் நடன நையாண்டி மேள சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன், ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.