சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் இன்று மதியம் அளித்த பேட்டி: கருத்து சொல்ல ஒவவொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி கட்டுப்படும். கூட்டணி குறித்து கட்சி தான் முடிவு எடுக்கும். கட்சிக்கும், கூட்டணிக்கும் எந்த சேதமும் ஏற்படாமல் தலைமை முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் மூலம் திருமாவளவன், ஆதவ் அர்ஜூன் சொன்ன கருத்து அவரது உரிமை என்ற ரீதியில் திமுகவுக்கு மறைமுகமாக பதில் அளித்து உள்ளார். எனவே அவர் திமுகவை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.