திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1-1-2025 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத் தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 29.10.2024 அன்று வெளியிட உள்ளது. 29.10.2024 முதல் 28.11.2024 வரை புதிய வாக்காளர்களைச் சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும் – திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அவர்களால் அறிவிக்கப்பட்டு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
மேற்குறிப்பிட்ட நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1.1.2025 அன்று 18வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற் கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும்- புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் –பெயர்களையும், புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்:
தொகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும். தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல்–29.10.2024
பெயர்களைச் சேர்க்க/ நீக்க / திருத்தம் செய்வதற்கு மனு கொடுக்க கால அவகாசம்29.10.2024 முதல் 28.11.2024
சிறப்பு முகாம் நடத்தப்படும் நாட்கள்–தலைமை தேர்தல் அதிகாரி அறிவிக்கும் சனி. ஞாயிறு நாட்கள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் 06.01.2025
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மேற்கண்ட அட்டவணையின்படி, சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக் கும் நாட்களில், மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர். ஊர்க்கிளை, வார்டு கழக செயலாளர் – நிர்வா கிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் (BLA-2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கழக அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தப் பணி குறித்து கழக நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமைக் கழகத்துக்கு அவ்வப் போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.