Skip to content
Home » மகாவிஷ்ணு விவகாரம்.. கடும் எதிர்ப்பால் எச்.எம் கள் 2 பேரும் மீண்டும் சென்னைக்கு மாற்றம்?

மகாவிஷ்ணு விவகாரம்.. கடும் எதிர்ப்பால் எச்.எம் கள் 2 பேரும் மீண்டும் சென்னைக்கு மாற்றம்?

  • by Senthil

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடை பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர் பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தின. இதனைத்தொடர்ந்து மகா விஷ்ணு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கலையரசி திருவள்ளூர் கோவில் பதாகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட செய்யப்பட்டார். அதேபோல் சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரிப் பள்ளித் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்த பணியிட மாற்றம் தலைமை ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வேறு வழியில்லாமல் தற்போது அவர்கள் இருவரையும் மீண்டும் சென்னை மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதன்படி தமிழரசி, சண்முகசுந்தரம் முறையே விருகம்பாக்கம், அடையார் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் கடந்த 6ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்ட  இருவரும் புதிய பணி இடங்களில் சேராமல் விடுமுறையில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!