தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் நூலகங்களை அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் வாசகர்களுக்கு விருது வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை சிறப்பாக பயன்படுத்திவரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து, சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறந்த தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகம் தேர்ந்தெடுத்து, சொந்த நூலகங்களுக்கு ரூ.3,000 மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. புத்தக ஆர்வலர்கள் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விவரம், எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது மற்றும் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக அலுவலகம், 286,அண்ணா சாலை, இராஜா மிராசுதார் மருத்துவமனை (எதிர்புறம்), தஞ்சாவூர்-613001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் அக்டோபர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது dlotnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என மாவட்டஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.