திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் சண்முகசுந்தரம். இவர் சாதிப்பற்றுடன் செயல்படுவதாக எஸ்.பி வருண்குமாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் எஸ்.பி. ரகசிய விசாரணை மேற்கொண்டதில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சாதி வெறியுடன் செயல்பட்டது தெரியவந்ததால் அவரை திருச்சி கண்ட்ரோல் ரூமுக்கு தூக்கி அடித்தார்.
திருச்சி மாவட்டம் காணக்கிளியநல்லூர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக இருந்தவர் எம்.ஜெயக்குமாா, இவரும் சாதி வெறியுடன் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்தும் விசாரிக்க உத்தரவிட்ட எஸ்.பி. , ஜெயக்குமாரின் செயல்பாடுகளால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
திருச்சி திருவெறும்பூர் போலீஸ்நிலையத்தில் எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றியவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி. இவர் வழக்குகளை விசாரிக்க லஞ்சம் வாங்குவதாக வந்த புகார் வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டார். கிருஷ்ணமூர்த்த்தி மீதான புகார் உண்மை என கண்டறியப்பட்டதால் அவரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. வருண் குமார் உத்தரவிட்டார்.
துறையூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிய பி. சத்தியராஜ் என்பவர், புத்தனாம்பட்டியில் உள்ள ஒரு பெண்ணிடம் கள்ளத்தொடர்பில் இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டார்.
குற்றவாளிகள் மீது ஒருபக்கம் தீவிர நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், காவல்துறைக்குள்ளும் அவ்வப்போது தலைதூக்கும் பிரச்னைகளுக்கும் உடனுக்குடன் எஸ்.பி. வருண்குமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.